தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும் அண்ணா பல்கலை பதிவாளர்! - சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி இரண்டாவது நாளாக நீதிபதி கலையரசன் குழு முன்பு மீண்டும் இன்று ஆஜரானார்.

Anna University Registrar Karunamoorthy appeared second day before Judge Kalaiyarasan commission
Anna University Registrar Karunamoorthy appeared second day before Judge Kalaiyarasan commission

By

Published : Dec 9, 2020, 5:37 PM IST

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விசாரணைக்கு தேவையான ஆவணங்களை பல்கலைக்கழகம் ஒப்படைக்காததால் பல்கலைக் கழகத்திற்கு நேற்றுமுன்தினம் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி நேற்று மாலை இரண்டரை மணிக்கு ஆஜராகி விசாரணை தொடர்பான ஆவணங்களை மூன்று அட்டை பெட்டிகளில் நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

ஆவண விவரங்களை கேட்டறிந்த நீதிபதி, மேலும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார்.

இதையடுத்து பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி இன்று மதியம் மீண்டும் கலையரசன் குழு முன்பு ஆஜராகி கூடுதல் ஆவணங்களை ஒப்படைத்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநருடன் துணைவேந்தர் சூரப்பா சந்திப்பு?

ABOUT THE AUTHOR

...view details