சென்னை:தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரோனாவால் பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்துவது குறித்து அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் உடனும் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினேன். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புத் தேர்வுகள் வரும் ஜுன் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் நடைபெறும். மேலும், 2013ஆம் ஆண்டு பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய இளங்கலை மாணவர்களுக்கான தேர்வும் ஜுன் 14ஆம் தேதி தொடங்கும். மற்ற பாடத்திட்டங்களில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குத் தேர்வு ஜுன் 21ஆம் தேதி தொடங்குகின்றது.