அண்ணா பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 12ஆம் தேதி மாணவர்களுக்கான செமஸ்டர் கட்டணம், அதற்கான காலக்கெடு ஆகியவற்றை சுற்றறிக்கையாக வெளியிட்டது.
அதில் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை கட்ட வேண்டும். மேலும் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த தவறும் மாணவர்களின் பெயர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.
இது குறித்து அண்ணா பல்கலைகழகத்தில் பயிலும் மாணவி பிரித்தி கூறும்போது, "கரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும் மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த வேண்டுமென அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை பேராசிரியர்கள் அச்சுறுத்துகின்றனர்.
செமஸ்டர் கட்டணத்தை ரத்து செய்ய மாணவி கோரிக்கை எனவே நாங்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டுமென பதிவாளர், துணை வேந்தருக்கு தனித் தனியாகவும், குழுவாகவும் கடிதம் அனுப்பியுள்ளோம். தற்போதைய சூழ்நிலையில் அரசு இந்த ஒரு பருவத்திற்கான செமஸ்டர் கட்டணத்தை ரத்து செய்து அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்தாகுமா? - உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்!