தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைனில் தொடக்கம்! - chennai news in tamil

ஆகஸ்ட் - டிசம்பரில் நடைபெறும் பருவத்திற்கு பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தவேண்டும் என அறிவித்ததோடு, அதற்கான வகுப்புகள் நடைபெறும் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

anna-university-online-class-started-august-18
ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைன் வகுப்பு!

By

Published : Jul 28, 2021, 8:06 AM IST

சென்னை:கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஆராய்ச்சி படிப்புகளுக்காக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நடப்பு பருவத்திற்கான வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 30வரை நடத்தப்படவேண்டும். டிசம்பர் 2ஆம் தேதி செய்முறைத் தேர்வுகளையும், டிசம்பர் 13ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகளையும் தொடங்கவேண்டும்.

மேலும், மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் கால அளவு குறைந்துள்ளதால், ஏழு சனிக்கிழமையும் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகளைத் தொடங்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Unlock measure: வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டெல்லி உயிரியல் பூங்கா திறப்பு

ABOUT THE AUTHOR

...view details