தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரமற்ற 89 கல்லூரிகள் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து அதன் கல்லூரி நிர்வாகிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் முறையிட்டனர்.
அதனடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சமூக வலைதளங்களில் அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், இணைவு கல்லூரிகளில் 89 கல்லூரிகள் தரமற்றது. அவற்றின் பெயர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை எண், ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ், இயங்கும் இணைவு கல்லூரிகளில் இதுபோன்ற தரமற்ற கல்லூரிகள், தரமான கல்விகள் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. குறிப்பாக, 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த தகவல்களை உறுதியாக வெளியிடவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
'அண்ணா பல்கலைக்கழகம் தரமற்ற கல்லூரிப் பட்டியல் எதையும் வெளியிடவில்லை!' - அப்டேட்டான அண்ணா பல்கலை செய்தி
சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் எதையும் வெளியிடவில்லை என அதன் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி
இதையும் படிங்க: நெல்லையில் பிளஸ் 2 மறுதேர்வு தொடங்கியது!