தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.பில்., எம்.எஸ்சி., எடுக்க விரும்பும் மாணவர்களே! இது உங்களுக்குத்தான்!! - ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

சென்னை: கிண்டி அண்ணா பொறியியல் கல்லூரியில் எம்.பில்., எம்.எஸ்சி., படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

anna university

By

Published : Apr 29, 2019, 10:46 AM IST

Updated : Apr 29, 2019, 12:02 PM IST

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் இரண்டு ஆண்டு எம்.எஸ்சி., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.பில்., ஆகிய பட்டப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கணக்கு, மூலப்பொருள் (மெட்டீரியல்) அறிவியல், மருத்துவ இயற்பியல், பயனுறு (அப்ளைடு) வேதியியல், பயனுறு (அப்ளைடு) உயிரியல், மின்னணு ஊடகம் ஆகியப் பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி., பட்டப்படிப்பும்,

ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்.எஸ்சி., பட்டப்படிப்பில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னணு ஊடகம் பட்டப்படிப்பும், எம்.பில்., பாடத்தில் கணக்கு, இயற்பியல், மருத்துவ இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், படிக அறிவியல், பயனுறு (அப்ளைடு) உயிரியல் ஆகியப் பாடப் பிரிவுகளிலும் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

www.annauniv.edu

என்ற இணைய தளத்தில் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

Last Updated : Apr 29, 2019, 12:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details