கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உதவக்கூடிய வகையில் இயந்திரப் படிவம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கியுள்ளது.
ஏ.யு. மிட் போட் (AU MIT BOT) என இந்த இயந்திரப் படிவத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது வைஃபை (Wifi) வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரப் படிவத்தை 500 மீட்டர் தொலைவிலிருந்து இயக்க முடியும். நோயாளிகளின் உடல்நிலையைக் கண்காணிப்பது அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளைக் கொண்டு செல்வது, கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு இந்த இயந்திரப் படிவத்தைப் பயன்படுத்த முடியும்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், உணவு வழங்கிடவும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட நபர்களின் அருகில் அதிகம் செல்ல வேண்டியுள்ளது.