தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் மூலம் இன்டர்ன்ஷிப் பயிற்சி - அண்ணா பல்கலைக்கழகம் - online internship training

கரோனா காரணமாக இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு செல்ல முடியாத இறுதியாண்டு மாணவர்கள், ஆன்லைன் மூலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

anna university
அண்ணா பல்கலைகழகம்

By

Published : Aug 9, 2021, 11:07 PM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்களில் நேரடிக் களப் பயிற்சிக்கு சில மாதங்கள் செல்ல வேண்டும்.

அதனடிப்படையில், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஆனால், இந்தாண்டு கரோனா பாதிப்பு காரணமாக இறுதியாண்டு மாணவர்களால் களப் பயிற்சிக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை.

இதுதொடர்பாக கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ’’அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்கான தொழில் நிறுவனப் பயிற்சியை ஸ்வயம் அல்லது திறந்தநிலை இணையவழித் திட்டம் மூலமாக மேற்கொள்ளலாம்.

பயிற்சியை முடித்த பின்னர் பெறப்பட்ட சான்றிதழ்கள் அல்லது மதிப்பெண் பட்டியலைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம். இதன் மூலம், களப் பயிற்சிக்கான மதிப்பெண்கள் பல்கலைக்கழகச் சான்றிதழில் சேர்க்கப்படும். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஓராண்டுக்கு மட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொறியியல் படிப்பில் சேர 1.32 லட்சம் மாணவர்கள் பதிவு

ABOUT THE AUTHOR

...view details