அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் என அனைத்திற்கும் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அண்ணா பல்கலைக்கழகம், உறுப்புக் கல்லூரிகள், அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன.