சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம் நேற்று (ஏப்.11) நிறைவடைந்தது. இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்.11ஆம் தேதி அண்ணா பல்கலை. துணைவேந்தராக பொறுப்பேற்றார். மூன்றாண்டு பதவிகாலம் நிறைவடைந்தை நிலையில், நேற்று ஓய்வு பெற்றார். அதனைத்தொடர்ந்து, பல்கலையை நிர்வகிக்க வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைவராகவும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா உறுப்பினராகவும், பல்கலை. ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அண்ணா பல்கலை. வழிகாட்டுதல் குழு நியமனம் - சென்னை செய்திகள்
அண்ணா பல்கலைகழகத்தை நிர்வாகம் செய்ய உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல் குழு நியமனம்
புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை பல்கலையை நிர்வாகம் செய்வதற்கான வழிகாட்டுதல்களை இந்த குழு வழங்கும். பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி வரவு செலவு திட்ட மதிப்பு வெளியீடு!