சென்னை:ஆயுத பூஜை, விஜயதசமிப் பண்டிகைகளை முன்னிட்டு அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், 3ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். இதனால் அக்டோபர் 3ஆம் தேதி வேலை நாளாகும்.
ஆயுத பூஜை - அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை - 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கு நாளை முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் வரும் 3ஆம் தேதி சிவில், மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அக்டோபர் 8ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளும் விடுமுறை அறிவித்தன. ஆயுதபூஜையை ஒட்டி நாளை முதல் 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையாக உள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நிலஅபகரிப்பு வழக்கு; ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..