தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பி.இ; பி.டெக் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் வெளியீடு! - anna university collage perfomance release

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019ஆம் கல்வி ஆண்டில் நவம்பர் பருவத் தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்களில் இரண்டு கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

By

Published : Jul 30, 2020, 10:51 PM IST

Updated : Aug 6, 2020, 6:40 PM IST

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னர், ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளில் அதே ஆண்டில் நடைபெற்ற தேர்வுகளில் கல்லூரி வாரியாகத் தேர்வு எழுதியவர்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விழுக்காட்டை வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் பி.இ, பி.டெக் பாடப்பிரிவில் கல்லூரி வாரியாகத் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தேர்ச்சி விகிதத்தினை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரிகள், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதம் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்ற விவரத்தினை annauniv.edu என்ற இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் 2019 நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துறை கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதியவர்களின் தேர்ச்சி, விழுக்காடு விவரம்:

1. மெட்ராஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் தேர்வு எழுதிய 3,073 மாணவர்களில் 2,331 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 75. 85 ஆக உள்ளது.

2. கிண்டி பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய 4,228 மாணவர்களில் 3,033 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 7.74 விழுக்காடாக உள்ளது.

3. அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திலிருந்து தேர்வு எழுதிய 1,914 மாணவர்களில் ஆயிரத்து 330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 69. 49ஆக உள்ளது.

4. பி.இ; பி.டெக் பட்டப்படிப்பினை நடத்தும் 38 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் நாமக்கல் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய 1,441 மாணவர்களில் 1,316 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விழுக்காடு 91. 33 விழுக்காடாக உள்ளது.

5. தன்னாட்சி பொறியியல் கல்லூரிகளில் கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் தேர்வு எழுதிய 1,054 மாணவர்களில் 471 மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 44. 69 பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

6. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில், கடந்தாண்டு(2019) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற தேர்வை 480 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதினர். அதில், இரண்டு கல்லூரிகளிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.


7. நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆஃப் பொறியியல் தொழில் நுட்ப மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதிய 108 மாணவிகளில் 103 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95. 37 ஆக உள்ளது.


8. அதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய 1,051 மாணவர்களில் 922 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.73 ஆக உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்வெழுதிய மாணவர்களில் 80 விழுக்காட்டிற்கும்மேல் 7 பொறியியல் கல்லூரிகள் பெற்றுள்ளன. 75 விழுக்காட்டிற்கும் மேல் 20 பொறியியல் கல்லூரிகள் பெற்றுள்ளன. 60 விழுக்காட்டிற்கு மேல் 59 பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் 101 கல்லூரிகளிலிருந்து தேர்ச்சி அடைந்துள்ளனர்.

224 கல்லூரிகளிலிருந்து தேர்வெழுதிய மாணவர்களில் 25 விழுக்காடு முதல் 49 விழுக்காடு வரை தேர்ச்சி பெற்றுள்ளனர். 154 கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 25 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி அடைந்துள்ளனர். 36 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள் 10 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 9 பொறியியல் கல்லூரியில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள், 5 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர் கேகேசி காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் இருந்து 237 மாணவர்களும், காஞ்சிபுரம் லார்டு வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியில் இருந்து 82 மாணவர்களும் தேர்வு எழுதினர். ஆனால், அதில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

16 பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்கள், ஒற்றை இலக்கத்தில் (1 முதல் 9) தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு முன்னர் மாணவர்கள், கல்லூரியின் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைப் பார்த்து சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்ய வசதியாக இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பகுதிகள் - அண்ணா பல்கலைக்கழகம் வரையறை!

Last Updated : Aug 6, 2020, 6:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details