அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் நடப்பாண்டிற்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. கடந்த 2001-2002ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள், இந்தப் பருவத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பு அளித்திருந்தது.
இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 23ஆம் தேி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்துக் கல்லூரி நிறுவனங்களும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டன.