தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் பழைய முறையிலேயே மறுதேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு - பொறியியல் மறுதேர்வு

சென்னை: முந்தைய எழுத்துத் தேர்வுகளைப் போலவே ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் நடைபெறவுள்ள மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

By

Published : May 29, 2021, 10:45 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின் 2020ஆம் ஆண்டின் நவம்பர், டிசம்பர் மாதத்திற்கான பருவத்தேர்வுகள் மீண்டும் மறுதேர்வாக நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை அண்ணாப்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.

இந்த மறுதேர்வு பழைய முறைப்படி, மூன்று மணிநேரம் காகிதம், பேனா ஆகியவற்றை பயன்படுத்தி எழுத அனுமதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய எழுத்துத் தேர்வுகளின் போது பின்பற்றப்பட்ட வடிவில்தான், மறுதேர்வு வினாத்தாள் அமைப்பும் இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இம்மறுதேர்வுகள் ஜூம், ஜூலை ஆகிய மாதங்களில் நடைபெறும் என அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாத தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில்ஆன்லைன் முறையில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக, தற்போது மறுதேர்வு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு; அண்ணா பல்கலை ஆசிரியர் சங்கம் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details