தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியர் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு.! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு.. - அண்ணா பல்கலைக்கழகம்

2001-2002ம் ஆண்டு கல்வியாண்டிற்கு பின்னர் அரியர் வைத்துள்ள இன்ஜினியரிங் மாணவர்கள், டிசம்பர் மாதம் நடைபெறும் சிறப்புத் தேர்வை எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

engineering students  Arrear Exams  Anna University  Anna University Announced Arrear Exams  Arrear Exams for engineering students  engineering  chennai news  chennai latest news  educational news  anna university announcement  Arrear Exams announcement  அண்ணா பல்கலைக்கழக புதிய அறிவிப்பு  அரியர் மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு  அரியர்  அண்ணா பல்கலைக்கழகம்  புதிய அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகம்

By

Published : Nov 24, 2022, 3:02 PM IST

சென்னை:இன்ஜினியரிங் பட்டத்தை படிப்பவர்கள் முதல் பருவத்தேர்வில் பெரும்பாலும் அரியர் வைத்து விடுகின்றனர். இவர்கள் 8 பருவத்திற்கான தேர்வினை முடித்தாலும், முதலில் வைத்த அரியா் பாடத்தில் தேர்ச்சி பெறாததால், பட்டத்தை பெற முடியாமல் உள்ளனர்.

பொறியியல் படிப்பினை 7 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காதவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்னர், சிறப்பு அனுமதி 2022ஆம் ஆண்டு வரையில் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்தது.

அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு

இந்நிலையில், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2001-2002ஆம் ஆண்டில் 3 வது பருவம் முதலும், 2002-2003ஆம் ஆண்டில் முதல் பருவம் முதல் அரியர் வைத்திருந்தாலும் மாணவர்கள் வருகின்ற நவம்பர், டிசம்பரில் நடைபெறக்கூடிய பருவத்தில் அரியர் தேர்வினை எழுதிக் கொள்ளலாம் என குறிப்பிட்டிருந்தனர்.

அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு

அரியர் எழுதும் மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5000 கூடுதலாக செலுத்த வேண்டும். டிசம்பர் 3ம் தேதிக்குள் www.coe1.annauniversity.edu என்ற தளத்தில் அரியர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 190 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.4.85 கோடி அளவில் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details