தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணா சாலை, காமராஜர் சாலை மூடல் - சென்னையில் கடுமையாகும் கட்டுப்பாடுகள் - complete lockdown in chennai

சென்னை: நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதால் சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகியவை மூடப்படும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/18-June-2020/7675196_275_7675196_1592500854820.png
chennai

By

Published : Jun 18, 2020, 11:36 PM IST

சென்னையில் கரோனா பரவலைத் தடுக்க இன்று (ஜூன் 19) நள்ளிரவு 12 மணி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாகப் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், "அத்தியாவசியத் தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கூடங்கள், ஆம்புலன்ஸ்கள், அமரர் ஊர்திகள் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்படும். இதேபோல் மருத்துவத் தேவைகளுக்காகச் செல்லக்கூடிய ஆட்டோ, டாக்ஸி, இருசக்கர வாகனம் ஆகியவற்றிற்கும் அனுமதி வழங்கப்படும்.

அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருந்து 2 கிமீ சுற்றளவிலுள்ள கடைகளுக்கு நடந்துசென்று பொருள்களை வாங்க வேண்டும். உணவு டெலிவரி, வங்கி, பால் விநியோகம், பெட்ரோல், சரக்கு வாகனங்கள், கேஸ் உள்ளிட்ட தேவைகளுக்காக வாகனம் ஓட்டுபவர்கள் அந்தந்த நிறுவனங்களிடமிருந்து முறையான அடையாளச் சீட்டை பெற்றுக்கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும். ஜூன் 21, ஜூ28 ஆகிய தேதிகளில் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செல்லும் வாகனங்களைத் தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.

அனுமதிச் சீட்டை பெரிய அளவில் (A5 அளவு) ஜெராக்ஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அனுமதிச் சீட்டு இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இவர்களைப் பிடிக்க 288 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலி அனுமதிச் சீட்டுகள் வைத்திருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளபடும். ஏற்கெனவே, அவசரத் தேவைக்காகப் பெறப்பட்ட இ-பாஸ் முழு ஊரடங்கின்போது செல்லாது. மறுபதிவு செய்து புதிய இ-பாஸை பெற்றுக்கொள்ள வேண்டும். 18 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேட்டி

சென்னையின் முக்கியச் சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை ஆகியவை மூடப்படுகின்றன. இந்த முழு ஊரடங்கு மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:களப் பணியாளர்களுக்கு புதிய கருவிகள் விநியோகம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ABOUT THE AUTHOR

...view details