1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கைவிடுத்தது. அதனையேற்ற சென்னை மாநகராட்சி கலையரங்க கட்டடத்துடன் சேர்த்து ஐந்தாயிரத்து 827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் பயன்படுத்திவந்தது.
அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48.85 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்தது.