கூடுவாஞ்சேரி கே.கே நகரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த உதயசங்கர்(25) என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஊழியர் தி.நகரில் உள்ள அந்த உணவகத்தின் தலைமையகத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், அங்கும் அவரை தகாத வார்த்தைகளில் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
அஞ்சப்பர் உணவகம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை! - தீ குளித்து தற்கொலை
சென்னை: பிரபல உணவகங்களில் ஒன்றான அஞ்சப்பர் உணவகம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
anjappar
இதனால் விரக்தியடைந்த அவர், தலைமையகம் முன்பாக நேற்றிரவு உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.