சென்னை:தாய்லாந்து நாட்டிலிருந்து கிளம்பிய தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணியின் உடைமைகளிலிருந்து மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவுகளில் வாழும் பாம்புகள், குரங்கு, ஆமை உள்ளிட்ட விலங்குகள் ஆவணங்களில்லாததால் பறிமுதல் செய்யப்பட்டன. முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சேர்ந்த முகமது ஷகீல் (21) என்பது தெரியவந்தது.
அந்த வகையில் அமெரிக்கா நாட்டின் கிங் ஸ்நேக் என்று அழைக்கக்கூடிய விஷமற்ற பாம்புகள் 15, ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளை வாழும் பால் பைத்தான் வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் சேஷல்ஸ் தீவில் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்னும் ஆமை 2, மத்திய ஆப்பிரிக்காவின் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1 என்று மொத்தம் 23 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.