தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கால்நடைகளுக்கு தீவனங்களை ஆய்வுசெய்து கொடுங்கள்" - அமைச்சர் வேண்டுகோள்! - Broiler chickens problems

சென்னை: மாட்டுத்தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கும் போது அவை கெடாமல் இருக்கிறதா என ஆய்வு செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.

-husbandry
-husbandry

By

Published : Nov 27, 2019, 3:37 PM IST

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கால்நடைத்துறை அலுவலகத்தில் துறையின் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த அவர், ”தமிழகத்தில் மாட்டுத்தீவனங்கள் கால்நடைகளுக்கு கொடுக்கும் போது அவை கெடாமல் இருக்கிறதா என ஆய்வு செய்துவிட்டு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படும் போது பூசாணம் போன்ற பாதிப்புகள் இல்லாமல் கொடுக்கலாம். இதன் மூலம் பாலில் ஏற்படும் நச்சுத் தன்மையைக் கட்டுப்படுத்த முடியும்.

பேரூராட்சிப் பகுதிகளில் நாட்டுக்கோழிகள் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது பேரூராட்சிப் பகுதிகளிலும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒன்றரை லட்சம் நாட்டுக்கோழிகள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

மாடு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள்

பிராய்லர் கோழிகள் தரமானதாக உள்ளதா, என்பது குறித்து ஆய்வு செய்ய ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது கோழிப்பண்ணைகளில் ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. பிராய்லர் கோழிகள் தொடர்பாக அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு செய்ய உத்தரவிடப்படும்.” என்றார்.

இதையும் படிங்க: இறைச்சி கடைகளில் இறந்த கோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details