தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போகிறது வெள்ளை புலி... வருகிறது வங்காள புலி... - வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வங்காள புலி

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து வெள்ளைப் புலி மாற்றம் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக வங்காளப் புலி கொண்டுவரப்பட்டுள்ளது.

Arignar Anna Zoological Park  animal exchange  animal exchange in Arignar Anna Zoological Park  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வங்காள புலி  வெள்ளைப்புலிக்கு பதில் வங்காள புலி
வருகிறது வங்காள புலி

By

Published : May 5, 2022, 11:05 PM IST

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் மங்களூரு டாக்டர் கே. சிவர்மா காரந்த் பிலிகுலா உயிரியல் பூங்கா இடையேயான விலங்கு பரிமாற்றத் திட்டத்திற்கு, டெல்லியிலுள்ள மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அதன்படி, இரு உயிரியல் பூங்காக்களும் மே 1 முதல் மே 5 வரை விலங்கு பரிமாற்றத்தை மேற்கொண்டன.

அதில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் வெள்ளைப் புலி மற்றும் ஒரு பெண் நெருப்புக்கோழியை கால்நடை மருத்துவர், உயிரியலாளர் மற்றும் சீருடைப் பணியாளர்கள் அடங்கிய குழுவுடன் பிலிகுலா உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் பிலிகுலா உயிரியல் பூங்காவிலிருந்து 2 ஜோடி செந்நாய், ஒரு ஆண் வங்கப் புலி, 2 ஜோடி நீக்கத்தான் பாம்பு மற்றும் ஒரு ஜோடி விட்டேக்கர் மண்ணுளி பாம்பு ஆகிய விலங்குகள் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.

இரண்டு உயிரியல் பூங்காக்களும் ஒப்புதல் வழங்கப்பட்ட விலங்குகளை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ளப்பட்டது. வரப்பெற்ற விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவுற்ற பிறகு, கால்நடை மருத்துவர்களின் மருத்துவச் சான்றின்படி விலங்குகள் விலங்கு இருப்பிடத்திற்கு மாற்றப்பட்டு பார்வையாளர்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.

இதையும் படிங்க: இந்தியாவில் புலி அடித்து இத்தனை பேர் இறப்பா?

ABOUT THE AUTHOR

...view details