சென்னை:ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், பிரபல நடிகையுமான ரோஜா இன்று தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்தார். அப்போது ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ரோஜா, “தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள நகரி தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகத் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு 1000 பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன, பாடப் புத்தகங்களை வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விஜயபுரம் மண்டலத்தில் ஆந்திர அரசு 5600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. நெடுமரம் முதல் அரக்கோணம் வரை சாலை அமைக்கத் தமிழ்நாட்டிலிருந்து ஒன்பது ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தோம். சம்பந்தப்பட்ட துறையோடு பேசி முடிவு தெரிவிப்பதாகக் கூறினார்.