தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட மீனவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Anbumani
Anbumani

By

Published : Oct 20, 2021, 7:28 PM IST

சென்னை:இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், " வங்கக்கடலில் புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீனவர்களின் படகு மீது கப்பலை மோதிக் கவிழ்த்து ராஜ்கிரண் என்ற மீனவரைக் கொன்ற சிங்களப் படையினர், அவரது உடலையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது மனிதநேயமற்ற அரக்கத்தனம்.

சிங்களப்படையால் கொண்டு செல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை உடனடியாக, அவரது சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு குறைந்தது ரூ.1 கோடி இழப்பீடாக பெற்றுத் தர வேண்டும்.

கேரளத்தையொட்டிய அரபிக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை சுட்டுக் கொன்றதற்காக இத்தாலிய கடற்படையினர் மீது எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அதை விடக் கடுமையான நடவடிக்கைகளை சிங்களக் கடற்படையினருக்கு எதிராக அரசு மேற்கொள்ள வேண்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கடலில் படகைச் சேதப்படுத்திய இலங்கை கடற்படை: மீனவர் மாயம்

ABOUT THE AUTHOR

...view details