சென்னை தலைமைச் செயலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான குழுவினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப்.18) சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்பு அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கில் போதிய தரவுகள் இல்லை என்று கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் நீதிமன்றம் தெரிவித்த தரவுகளில் சேகரித்து மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பதாக தெரிவித்தார். ஆனால், ஒரு மாதம் முடிவடைந்து நிலையில், தாமதம் ஏற்படாதவாறு இரண்டு மாதத்திற்குள்ளாக மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்காத வகையில் இந்த கல்வியாண்டுக்குள் 10.5 இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்” என்றார்.
மேலும், இட ஒதுக்கீடு மற்றும் நீர் மேலாண்மை விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசியதாகவும், அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும் அன்புமணி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காவேரி உபரி நீர் திட்டம் மற்றும் அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், தமிழ்நாட்டில் போதை பொருட்கள் தடுக்க சிறப்பு கவனம் எடுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மாதம் தோறும் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.
முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டிற்கு பாமகவிற்கு ஆதரவு கிடையாது என்று தெரிவித்த அன்புமணி, சாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும், ஆனால் இது நீண்ட கால செயல்பாடு என்பதால், இந்த இரண்டு மாதத்திற்குள்ளாக நீதிமன்றம் தெரிவித்த தரவுகளை சேகரித்து மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படாத அளவிற்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசை வலியுறுத்தியாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:இபிஎஸ் பெயரில் 'கண்ணன் குலம்' சர்ச்சை கடிதம்; அதிமுக ரியாக்ஷன் என்ன?