தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் மாபெரும் பெருந்திரள் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
வலுக்கும் இடஒதுக்கீடு போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு முதலமைச்சர் அழைப்பு! - வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம்
சென்னை: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடைபெறும் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்புமணி ராமதாசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
![வலுக்கும் இடஒதுக்கீடு போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்த அன்புமணிக்கு முதலமைச்சர் அழைப்பு! Chief Minister](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9723598-thumbnail-3x2-10.jpg)
Chief Minister
போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவரும் இந்தச் சூழலில், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:வன்னியர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டத்தை கையிலெடுக்கும் பாமக!