தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நிவாரண நிதி அளித்த அன்புமணி: எவ்வளவு தெரியுமா? - corona fund

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் தமது ஒரு மாத ஊதியமான ரூ.1,89,000-த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எம்.பி - கரோனா நிவாரண நிதி
அன்புமணி ராமதாஸ் எம்.பி - கரோனா நிவாரண நிதி

By

Published : May 18, 2021, 4:40 PM IST

Updated : May 18, 2021, 8:29 PM IST

பாமக நிறுவனரும், மருத்துவருமான ராமதாஸ் தனது கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியத்தை கரோனா பொது நிவாரண நிதிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில், தமது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அனுப்பி வைத்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதும், அதிலிருந்து மக்களைக் காப்பதும் மிகவும் சவாலான பணி என்பதில் ஐயமில்லை. கரோனா தடுப்புப் பணிகளுக்காக அனைத்துத் தரப்பினரும் நிதி வழங்கும்படி தாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்குவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்கள்.

அவர்கள் அறிவித்தவாறு எனது ஒரு மாத ஊதியமான 1,89,000 ரூபாயை வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தி, பொது மக்களைக் காப்பாற்றுவது தான் நமது முதல் பணியாகும். அதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், மாநிலங்களவை உறுப்பினர், மருத்துவர் என்ற முறையில் நானும் அனைத்து வழிகளிலும் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை இணையதளத்தில் பதிவு செய்து பெறலாம்!

Last Updated : May 18, 2021, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details