அன்புமணி ராமதாஸ் ட்வீட்டரில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், "இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - அன்புமணி வாழ்த்து! - Dada Saheb Phalke to Rajini
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ரஜினிக்கு வாழ்த்து கூறி ட்விட் செய்துள்ளார்.
Anbumani congratulates Rajini on Dada Saheb Phalke Award
தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:பால்கே விருது: பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரஜினி