தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2021, 4:39 PM IST

Updated : May 12, 2021, 6:16 PM IST

ETV Bharat / state

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை தலைமைச் செயலகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக நடத்திய ஆலோசனையில் அனைவரும் கண்டிப்பாக தேர்வு நடத்த வேண்டும் என்ற கருத்தையே முன் வைத்துள்ளனர். எனவே, தேர்வு ரத்த செய்யப்படாது. கரோனா தொற்று குறைவதைப் பொறுத்து தேர்வு அறிவிக்கப்படும்.

கடந்த ஒரு மாதமாகவே தேர்தல் காரணமாக மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இனி பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் மூலம் ஆன்லைன் முறையில் பயிற்சி வழங்கப்படும். தேர்வு தேதி அறிவிப்பதற்கு முன் உரிய கால அவகாசம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்

பலர் நேரடி வகுப்பு நடத்திய பின்னர் தேர்வு வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். தேர்வினை ஆன்லைன் முறையில் இல்லாமல் நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும்.

கரோனா தொற்று குறைந்த பின்னர் மாணவர்களுக்குத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும். தேர்வைக் கண்டு மாணவர்களும் பெற்றோர்களும் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.

இதையும் படிங்க: சபாநாயகர் அப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Last Updated : May 12, 2021, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details