அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு சென்னை: சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் அகத்தியர் விண்வெளி அறிவியல் குழுமம் சார்பில் ரஷ்ய விண்வெளி ஏவுதளப் பயண பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து போது கூறியதாவது, ’இந்தியாவுக்கு ரஷ்யா அதிக உதவிகள் செய்து உள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் மணற்கேணி திட்டத்தை கொண்டு வந்தார். அதில் 7000 வீடியோக்கள் மாணவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்க முடியும். மேலும் தொழில்நுட்பத்தை பொறுத்தவரை வரும் நாட்களில் ராக்கெட் சயின்ஸ் போன்ற வீடியோக்களும் அதில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
மெஷின் லேர்னிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவைகள் கற்று கொள்ள மைக்ரோசாப்ட் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விஞ்ஞானி சிவதாணு பிள்ளை போல் பலர் பள்ளி மாணவர்கள் உதவும் வகையில் செயல்பட்டு வரும் நிலையில் அரசு சார்பிலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
ஆசிரியர் சங்கங்களில் கோரிக்கைகளில் எவற்றை நிறைவேற்ற முடியும் என்பது குறித்து முதலமைச்சர், நிதி அமைச்சருடன் ஆலோசித்து நிதிக்கு ஏற்ப ஆசிரியரின் கோரிக்கைகள் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.ஒட்டு மொத்த இந்தியாவிலேயே பயிற்சி பெற்ற மனித வளங்கள் இருப்பது தமிழ்நாடு தான். மேலும், ஆசிரியர்களுக்கு சிஆர்சி பயிற்சி மூலமாக வழங்கபட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் 100 கோடி வரை பெறப்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் குறிப்பிட்ட பள்ளி அல்லது மாணவருக்கு செய்ய வேண்டுமென நிதியினை ஒதுக்கீடு செய்கின்றனர். முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற ஆளுநர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
மத்திய அரசின் நிதி திட்டங்கள் அனைத்தையும் தமிழகம் முறையாக பயன்படுத்தி வருகிறது. ஏதேனும் குற்றச்சாட்டு ஆளுநர் தெரிவிக்க வேண்டுமெனில் எனும் ஒரு குற்றச்சாட்டை குறிப்பிட்டு தெரிவித்தால் அதற்கு விளக்கம் அளிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். தற்பொழுது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் நியமனத்திற்கான போட்டித் தேர்வு கூறிய 149 அரசாணை ரத்து செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என கூறினார்.
இதையும் படிங்க:‘இது என்னோட மண்.. ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது’ - கோவையில் திமுகவினர் போஸ்டரால் பரபரப்பு!