சென்னை: தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான தேர்வினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி சான்றிதழ்களை வழங்கி வருகிறது. தற்பொழுது சான்றிதழ்களின் நகல் வேண்டும் என்றால், அதற்கு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். இதனால் அவர்களுக்கான சான்றிதழ்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. சான்றிழ்கள் கிடைக்காமல் இருப்பதால் நேரடியாக தேர்வுத் துறைக்கு வருகின்றனர்.
மாணவர்கள், பொதுமக்கள் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்யாமல், பிழையுடன் பூர்த்தி செய்து விண்ணப்பித்து விடுவதால் அவர்களது விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல் திரும்ப அனுப்பப்படும் நிலையும் உள்ளது.
இந்த நிலையில் சான்றிதழ்களின் இரண்டாம் படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், பிற மாநிலங்களில் உயர்கல்வி படிப்பதற்கான இடம் பெயர்வு சான்றிதழ் போன்றவற்றிக்கும் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யும் வசதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி இன்று (டிச.20) துவக்கி வைத்தார்.
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் கூறியதாவது, “பொதுமக்கள் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டவுடன் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு இணைய வழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.