தமிழ்நாடு அரசியலில் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், திமுக பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காணத்தால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலமானார்.
‘அன்பழகன் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன்’ - டிடிவி தினகரன் - பேராசிரியர் க.அன்பழகன்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
dmk-ttv-tweet
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டரில், “திமுக பொதுச்செயலாளர் பெரியவர் பேராசிரியர் க. அன்பழகன் காலமான செய்தியறிந்து வருத்தமுற்றேன். தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கீழ்ப்பாக்கத்தில் அன்பழகன் உடல் தகனம்