நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி - அன்பழகன்
சென்னை: தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
![திமுக பொதுச்செயலாளர் அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2724346-738-e2d277f9-c1a0-4ae3-9ef6-8dfafc2c3c75.jpg)
திமுக வேட்பாளர் கனிமொழி
இந்த வேட்பாளர் பட்டியலில் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக வேட்பாளர் கனிமொழி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.