தமிழ்நாடு

tamil nadu

2019ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நிகழ்ந்த குற்றப் புள்ளி விவரம் - ஓர் விரிவான அலசல்

By

Published : Oct 1, 2020, 10:02 PM IST

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பெண்களுக்கு எதிராக மட்டும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 16 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் சென்ற ஆண்டு 331 பாலியல் வன்புணர்வு குற்றங்களும், ஆறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.சி.ஆர்.பி அறிக்கை
என்.சி.ஆர்.பி அறிக்கை

சென்னை :தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒட்டுமொத்த குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில், தமிழ்நாட்டில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 247 குற்றங்களும், ஒரு மணி நேரத்திற்கு 52 குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவு 2016 2017 2018 2019
தமிழ்நாட்டில் நிகழ்ந்த மொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை 4,67,369 4,20,876 4,99,188 4,55,094
  • தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நாள் ஒன்றுக்கு சராசரியாக 16 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
  • மேலும், 2019ஆம் ஆண்டு சென்னை மாநகரில் மட்டும் 71 ஆயிரத்து 949 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டில் உள்ள மொத்த மெட்ரோ நகரங்களில் நடைபெற்ற குற்றங்களில் 8.4 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிக்கப்பெரும் குற்றங்கள் :

பிரிவு 2017 2018 2019
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 5,397 5,822 5,934
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 3,529 4,155 4,139
மூத்தக் குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) 2,769 3,162 2,509
சைபர் குற்றங்கள் 228 295 385
பட்டியலினத்தோர் மீதான குற்றங்கள், வன்முறைகள் 1,362 1,413 1,144
பழங்குடியின மக்கள் மீதான குற்றங்கள், வன்முறைகள் 22 15 31
பொருளாதாரக் குற்றங்கள் 3511 3865 3517
வெளிநாட்டவருக்கு எதிரான குற்றங்கள் 43 51 23
ஊழல் மற்றும் அது தொடர்பான குற்றங்கள் 257 264 418
ஆள் கடத்தல் 1,027 1,097 898
கொலைக் குற்றங்கள் 1,560 1,569 1,745

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

  • 2019ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக மட்டும் மொத்தம் 5,934 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
  • இவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 16 குற்றங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளன.
  • இவற்றில் இரண்டு ஆசிட் வீச்சு சம்பவங்களும் அடங்கும்.
  • மேலும் பெண்களுக்கு எதிராக மொத்தம் 331 பாலியல் வன்புணர்வுக் குற்றங்களும், ஆறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

பிரிவு 2018 2019
பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை / கூட்டுப் பாலியல் வன்புணர்வு 4 8
வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்தவர்கள் 55 28
தற்கொலைக்கு தூண்டப்பட்ட பெண்கள் 244 236
ஆசிட் வீச்சு சம்பவங்கள் 2 4
கணவர், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் 789 781
கடத்தப்பட்ட பெண்கள் 896 699
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் 331 362
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் 29 38

மெட்ரோ நகரங்களில் நிகழ்ந்த குற்றங்கள்

பிரிவு 2017 2018 2019
சென்னை 41,573 85,027 71,949
கோயம்புத்தூர் 11,762 14,936 15,821
  • 2018ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 197 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை – என்.சி.ஆர்.பி 2019

பிரிவு 2018 2019
கொலை 172 172
சைபர் குற்றங்கள் 73 118
கவனக் குறைவாக வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த மரணங்கள் 1284 1229
பாலியல் தொல்லை 12 15
பெண்கள் மீதான தாக்குதல் 47 89
கடத்தல் 56 49
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 775 731
பாலியல் வன்புணர்வு 35 42
வாகனத் திருட்டு 1741 1790
போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள் 305 452

ABOUT THE AUTHOR

...view details