தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் - ஒரு பார்வை

16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் 28 நாட்கள் நடைபெற்று முடிந்தது.

முதல் கூட்டத்தொடர் ஒரு பார்வை
முதல் கூட்டத்தொடர் ஒரு பார்வை

By

Published : Sep 13, 2021, 8:07 PM IST

சென்னை:கலைவாணர் அரங்கில் ஜுன் 21 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. மானியக் கோரிக்கைகள், விவாதம் என அனைத்தும் முடிந்து இன்று (செப்.13) கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

முதல் கூட்டத்தொடர் ஒரு பார்வை

  • ஆளுநர் உரையுடன் பேரவை கூடிய மொத்த நாட்கள் - 28 நாட்கள்
  • அவை கூடிய மொத்த நேரம் - 126 மணி நேரம் 35 நிமிடங்கள்
  • மானியக்கோரிக்கைகள் விவாதம் & வாக்கெடுப்பு நடைபெற்ற நாட்கள் - 17 நாட்கள்
  • உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் - 134 பேர்
  • உரையாற்றிய நிமிடங்கள் - 43 மணி நேரம் 36 நிமிடங்கள்
  • திமுக உறுப்பினர்கள் - 69 பேர் - 21 மணி நேரம் 30 நிமிடங்கள்
  • அதிமுக உறுப்பினர்கள் - 28 பேர் - 12 மணி 1 நிமிடங்கள்
  • துறை சார்ந்து முதலமைச்சரின் பதிலுரை - 39 நிமிடங்கள்
  • துறை அல்லாத மற்ற துறைகளில் முதலமைச்சர் விளக்கம் - 13 முறை , விளக்கம் - 9 நிமிடங்கள்
    2

10 ஆண்டுகள் 32 நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் கேள்வி - பதில் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.

அதிக கேள்விகள் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவரம்

1. தாயகம் கவி ( திமுக ) - 7685 கேள்விகள்
2. ஜி.கே.மணி ( பாமக ) - 6478 கேள்விகள்
3. அரவிந்த் ரமேஷ் ( திமுக ) - 3583 கேள்விகள்

2

அதிக கேள்விகளுக்கு விடையளித்த அமைச்சர்கள் விவரம்

1. கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி - தலா 4 பதில்கள்
2. தங்கம் தென்னரசு - 3 பதில்கள்

  • அவசர முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் - 12
  • அரசின் கவன ஈர்ப்புகள் வரப்பெற்றவை - 349
  • அரசின் கவன ஈர்ப்புக்காக அனுமதிக்கப்பட்டவை - 81
  • அவையில் விளக்கமளிக்கப்பட்ட கவன ஈர்ப்புகள் - 07
  • அரசினர் சட்டமுன்வடிவுகள் வரப்பெற்றவை - 30
  • அரசின் சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டவை - 30
  • அரசின் தீர்மானங்கள் வரப்பெற்றவை - 03
  • அரசின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டவை - 03
  • 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள் - 10

இதையும் படிங்க: ’தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு’

ABOUT THE AUTHOR

...view details