சென்னை: மாதவரத்தை சேர்ந்தவர் மதன்குமார் (35). சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் உள்ள லாரி பார்க்கிங் யார்டில் ஆந்திராவில் இருந்து வரும் லாரிகளில் இரும்பு கம்பிகளை இறக்கி வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.
நேற்றிரவு இவர் லாரி பார்க்கிங் யார்டில் முகம் சிதைக்கப்பட்டு சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக சோழவரம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று மதன்குமாரை வெட்டி கொலை செய்து தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.