சென்னை: மூன்றாவது ஜி-20 நீடித்த நிதிக்கான செயற்குழு (FWG) கூட்டத்தை முன்னிட்டு சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் (Reserve Bank Staff College) ஜி20 உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. இந்த 3வது ஜி20 நீடித்த நிதிக்கான செயற்குழு (SFWG) கூட்டமானது, ஒரு நிலையான எதிர்காலத்தை அடைவதற்கான நோக்கத்தோடு உள்நாட்டு மக்கள் உடனான தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இக்கூட்டம் நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் 3வது ஜி 20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்திற்கு (3rd G20 Sustainable Finance Working Group at Mamallapuram) முன்னதாக, சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் கீது ஜோஷி வரவேற்புரை வழங்கினர். ஜி 20 மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக ஜி20 இந்திய தலைமையின் கீழ், நீடித்த நிதிக்கான செயற்குழுவால் எடுக்கப்பட்ட முன்னுரிமைகள் அமைந்தது.
பருவநிலை நடவடிக்கைகள் மட்டுமல்லாது அதற்கும் அப்பாற்பட்ட காரணங்களுக்காகவும் நிதி திரட்டுதல் மற்றும் நிலையான நிதியை அளவிடுவதற்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பட்டறையில் இந்தியாவில் சமூக தாக்க முதலீட்டை அதிகரிப்பது, அனுபவப் பகிர்வு மற்றும் நீடித்த நிதிக்கான சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வளர்ப்பது குறித்து இரண்டு குழுக்களாக விவாதங்கள் நடைபெற்றன. குழு விவாதங்களை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் பிரிஜ் ராஜ் நடத்தினார். குழுவில் மூத்த தொழில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.