சென்னை:கோடம்பாக்கம் ரத்தினம்மாள் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்திருப்பவர்கள், மூர்த்தி(78), பானுமதி (76) தம்பதி. அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்கள் இருவரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் தரைதளத்தில், தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் கேட்டை மூடுவதற்கு மூர்த்தி வெளியே வந்துள்ளார். அப்போது இரும்பு கேட்டை தொட்டபோது மின்சாரம் தாக்கி கேட்டை பிடித்தபடியே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற கணவர் வெகுநேரமாகியும் வரவில்லையே என அவரது மனைவி பானுமதி வெளியே சென்று பார்த்தபோது, இரும்பு கேட்டில் தொங்கியபடி இருந்த கணவரை காப்பாற்ற சென்றபோது, பானுமதியும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.