சென்னை: வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி 25வது தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(55). ஆட்டோ ஓட்டுனரான இவர் இன்று(நவ.1) காலை கடைக்கு செல்வதற்காக பக்தவச்சலம் காலனி 18வது தெரு வழியாக மழைநீரில் நடந்து சென்றார். அப்போது திடீரென தேவேந்திரனின் உடலில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த எம்.கே.பி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேவேந்திரனின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த பெரியமேடு போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் பெண் காவலரின் தந்தை சுப்பிரமணி நேற்று(அக்.31) உயிரிழந்தது தெரியவந்துள்ளது.