தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2022, 12:25 PM IST

ETV Bharat / state

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர்- பாதிக்கபட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

வழக்கு ஒன்றில் கைதானவரின் ஆட்டோவை பறிமுதல் செய்து வருவாய் பாதிப்பை ஏற்படுத்தியதால் பாதிக்கப்பட்டவருக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மனித உரிமை மீரலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்- பாதிக்கபட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
மனித உரிமை மீரலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள்- பாதிக்கபட்டவருக்கு 2 லட்சம் ரூபாய் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை, குன்றத்தூரை சேர்ந்த மாவு மில் உரிமையாளர் பசுவண்ணன் என்பவரை தாக்கியதாக, அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர் மதன்குமார் ஆகியோரை குன்றத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முன்னதாக தாங்கள் இருவரையும் காவல் துறையினர் கடுமையாக தாக்கியதுடன், மதன் குமாரின் ஆட்டோவை பறிமுதல் செய்ததாகவும், ஆட்டோவின் பதிவு எண்ணை தவறாக குறிப்பிட்டதால் அதை மீட்கமுடியாமல் பாதிக்கப்பட்டதாகவும், பிரகாஷ், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

அதில், தங்களை துன்புறுத்திய குன்றத்தூர் ஆய்வாளர் சார்லஸ், காவலர்கள் சபரி, வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், காவல் துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாகவும், ஆட்டோவை பறிமுதல் செய்து வருவாய்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட பிரகாஷுக்கு 2 லட்சம் ரூபாயை ஆறு வாரங்களில் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

மேலும், இத்தொகையில் ஆய்வாளர் சார்லசிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயும், காவலர்கள் இருவரிடம் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாயும் வசூலிக்க உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளருக்கு பரிந்துரைத்துள்ளது.

இதையும் படிங்க:பேருந்து கட்டணம் உயருமா? - குழப்பமும் விளக்கமும்

ABOUT THE AUTHOR

...view details