சென்னை : முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் மேலும் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், இதன் மூலம் 3237 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி 1030 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 3237 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், 2020-21ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை ஒன்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடை குறிப்பின் மீது வாட்ஸ்அப் மூலம் வினைகளை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது.