தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக பி.அமுதா தேர்வு - ஆணையர் ககன்தீப் சிங் பேடி

சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக கவுன்சிலர் பி.அமுதா தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக பி.அமுதா தேர்வு
சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக பி.அமுதா தேர்வு

By

Published : Oct 28, 2022, 8:36 PM IST

சென்னை சென்னைப்பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக 68ஆவது வார்டு கவுன்சிலர் பி.அமுதா இன்று நடைபெற்ற சென்னை மாமன்றக் கவுன்சிலர் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான வேட்புமனுவை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் ரிப்பன் கட்டடத்தில் ஒப்படைத்தார்.

கவுன்சிலர் பதவிக்கான விண்ணப்பங்கள் கடந்த 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையரிடம் ஒரே ஒரு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு இல்லாமல், செனட் உறுப்பினராக அமுதா தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

தேர்தல் அலுவலரான ஆணையரின் அறிவிப்பின்படி, சென்னைப் பல்கலைக்கழகச் சட்டம், 1923-ன் படி, குடிமை அமைப்பின் கவுன்சிலர் செனட் உறுப்பினராக அனுப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன விற்பனையகத்தில் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details