தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீண்டும் வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர போராடுவோம்..!' - வெற்றிவேல் உறுதி - Minister Jeyakumar

சென்னை: வருங்காலத்தில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த அமமுக போராட்டம் நடத்தி வெற்றிப் பெறும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

vetrivel byte

By

Published : Jun 5, 2019, 4:41 PM IST

Updated : Jun 5, 2019, 4:48 PM IST

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பள்ளிவாசலில் காயிதே மில்லத் நினைவிடத்தில் அமமுக நிர்வாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் மலர் போர்வை போற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேர்தலில் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, "அமைச்சர் ஜெயகுமார் இருக்கும் அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தலில் நின்ற அவரது மகன் கூட வெற்றிபெற வில்லை. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் எங்களை காலி பண்ணியுள்ளனர். அதை வைத்து மத்திய அரசை எந்த கட்சிகள் எதிர்க்கிறதோ அனைத்தையும் தோற்கடித்துள்ளனர். ஜெயக்குமார் போன்றவர்கள் பேசி பேசிதான் அரசியல் செய்ய முடியும். வருங்காலத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தலை நடத்தாமல், வாக்கு சீட்டு நடைமுறைப்படுத்த போராட்டம் நடத்தி வெற்றியும் பெறுவோம்" என்றார்.

அமமுக நிர்வாகி வெற்றிவேல்
Last Updated : Jun 5, 2019, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details