அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்! - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
18:52 October 15
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வெற்றிவேல் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டபோது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து சென்னை - போரூர் ராமச்சந்திரா வெற்றிவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், நுரையீரலில் தொற்று அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த இவர், இன்று(அக்.15) மாலை சிகிச்சைப் பலனின்றி காலமானார்.