தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்மையை போற்றுவோம்... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன் - தாய்மையை போற்றுவோம்

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அன்னையர் தின வாழ்த்துகளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ttv dinakaran
ttv dinakaran

By

Published : May 10, 2020, 5:58 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தாய்மை எனும் ஈடு இணையில்லாத குணத்தோடு திகழ்கிற அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத்தின் மறு உருவமாக கண்கண்ட கடவுளாக இருப்பதால்தான் அவர்களை முதலிடத்தில் வைத்து வணங்குகிறோம்.

எதிர்பார்ப்பில்லாத அன்பு, எப்போதும் அரவணைக்கிற பண்பு, தேவையான இடத்தில் கண்டிப்பு, பலனை எதிர்பார்க்காத பாசம் போன்ற போற்றத்தக்க குணங்களின் ஒருமித்த அடையாளமாக இருப்பது தாய்மை. அப்படி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்து வாழும் தாய், முதலமைச்சர் ஜெயலலிதா.

'அம்மா' என்று சொன்னாலே இன்றைக்கு அத்தனை பேரின் கண் முன்னேயும் தமது உருவம் தோன்றுகிற அற்புதத்தை நிகழ்த்திய ஜெயலலிதாவை இந்த நல்ல நாளில் நினைவு கூருவோம். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜெயலலிதாவின் அடியொட்டி செயல்படுகிற நாம் தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம்.

தாயுள்ளத்தோடு நம்மிடம் அன்பு காட்டுகிற, ஆசிர்வதிக்கிற அனைவரையும் போற்றி வணங்கிடுவோம். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் - ரஜினி கருத்து!

ABOUT THE AUTHOR

...view details