தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்"- டிடிவி தினகரன் - AMML update news

சென்னை: இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ammk-ttv-dhinakaran
ammk-ttv-dhinakaran

By

Published : May 24, 2020, 12:43 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநாள் என்ற மகிழ்வோடு ஈகைத்திருநாளான ரமலானைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பசித்திருத்தலின் மூலம் மனதையும், உடலையும் தூய்மைப்படுத்துவதற்காக நோன்பிருந்து, பகிர்ந்து கொடுப்பதன் மகிழ்ச்சியை உலகிற்குச் சொல்லும் வகையில் ஈட்டிய செல்வத்தில் ஒரு பகுதியை இல்லாதோருக்குக் கொடுத்து, எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் புனித ரமலானைக் கொண்டாடுகிறார்கள். இந்த நன்னாளில் மனித குலம் எதிர்கொண்டிருக்கிற பெருந்துயரில் இருந்து அனைவரும் மீண்டிட இறைவனைப் பிரார்த்திப்போம்.

வலிமையோடும், நலன்களோடும் எல்லோரும் எழுந்திடுவதற்கான நம்பிக்கையை நம்மைச் சுற்றியிருக்கிற ஒவ்வொருவருக்கும் விதைப்போம். இறை தூதர் நபிகள் நாயகம் போதித்த மனித நேயம், ஈகை, கோபம் தவிர்த்தல் உள்ளிட்ட உயர் பண்புகளின் வழியாக தலைசிறந்த மனித சமுதாயத்தை உருவாக்கிட புனித ரமலானில் அனைவரும் உறுதியேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி தூப்பாக்கிச் சூடு - பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details