இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்கு எண்ணும் மையங்களில் ஆளுங்கட்சியினர் பிரச்னை செய்யக்கூடும். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா அதிகளவில் பொருத்த தலைமை தேர்தல் அலுவலரிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
சிசிடிவி கேமராக்களை அதிகளவில் பொருத்த வேண்டும் - வெற்றிவேல்!
சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் ஆளுங்கட்சியினர் பிரச்னை செய்யக்கூடும் என்றும் அதனால் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களை அதிகளவில் பொருத்த தமிழ்நாட்டு தலைமை தேர்தல் அலுவலரிடம் அமமுக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் மனு அளித்துள்ளார்.
வெற்றிவேல்
மேலும், மத்திய ரிசர்வ் படை மற்றும் துணை ராணுவப் படையை கூடுதலாக அமர்த்தி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம். கருத்து கணிப்பை பொறுத்தவரை அவர்களின் தனிப்பட்ட கருத்தை மக்கள் மீது திணிக்க முயல்கின்றனர் " என்றார்.