ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
அமமுக தென் சென்னை வேட்பாளர் வேட்புமனுத் தாக்கல்! - வேட்புமனு
சென்னை: தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் தாக்கல் செய்தார்.
அமமுக தென் சென்னை வேட்பாளர் இசக்கி சுப்பையா வேட்புமனு தாக்கல்
இதன் காரணமாக பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதன்படி, அமமுக தென் சென்னை வேட்பாளர் இசக்கி சுப்பையா, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் அமைந்துள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, அமமுக தொண்டர்களுடன் பேரணியாக இசக்கி சுப்பையா வந்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.