தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சசிகலா வருகை: டிடிவி தினகரன் ட்வீட்! - ammk general secretary ttv dhinakaran tweet on sasikala

வரும் 8ஆம் தேதி சசிகலா தமிழ்நாடு வருகை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

டிடிவி தினகரன் ட்வீட்
டிடிவி தினகரன் ட்வீட்

By

Published : Feb 6, 2021, 7:26 PM IST

அண்மையில் பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானதை முன்னிட்டு அமமுகவினர் அவரை வரவேற்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டினர். இதையடுத்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், "தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மீது அன்பு கொண்ட அனைவரும் மகிழ்ச்சியோடு தயாராகி வரும் நிலையில், அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் ஏன் இந்தளவுக்கு பதற்றமடைகிறார்கள் என்று தெரியவில்லை.

மேலும், அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கத்தின் மீதான உரிமை தொடர்பாக சின்னம்மா அவர்களால் தொடரப்பட்டு, சென்னை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை, வசதியாக மறைத்துவிட்டு இவர்கள் பேசி வருகிறார்கள்.

இவர்களின் பேச்சையெல்லாம் மக்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத்தொண்டர்களும் முகம் சுழித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்." என பதிவிட்டிருந்தனர்.

இதையும் படிங்க... அனுமதியின்றி பேரணி சென்றால் நடவடிக்கை! - காவல் ஆணையர் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details