தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

' திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தியாகமும் செய்யத் தயார்!' - டிடிவி தினகரன் - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்

திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தியாகமும் செய்யத் தயார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

'அதிமுகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!' - டிடிவி தினகரன்
'அதிமுகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..!' - டிடிவி தினகரன்

By

Published : Jun 30, 2022, 4:31 PM IST

Updated : Jun 30, 2022, 7:28 PM IST

சென்னை:ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "உள்ளாட்சி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதிமுக பொதுக்குழுவை அராஜக போக்குடன் நடத்தியதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

' திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தியாகமும் செய்யத் தயார்!' - டிடிவி தினகரன்

தேர்தலில் வெற்றி பெற்றுதான் அதிமுகவை மீட்டெடுப்போம். அதிமுக என்பது வேற கட்சி. நான் அமமுகவின் பொதுச்செயலாளர். இரண்டு பேரும் பதவி சண்டை போடுவதில் நாங்கள் தலையிடமுடியாது. அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் சம்பந்தமும் இல்லை.

ஆட்சி இருக்கும்வரை சரியாக போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது ஆட்சி முடிந்தவுடன் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை என சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். தவறானவர்கள் கையில் இரட்டை இலை போய்விட்டது. ஓ.பன்னீர்செல்வம் எனது பழைய நண்பர், அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நடந்து கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

நிர்வாகிகளை வைத்து ஒற்றைத்தலைமை ஆகிவிட வேண்டும் என நினைப்பது தவறான ஒன்று. இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் அன்றே தொண்டர்களால் பொதுச்செயலாளர் பதவி தேர்வு செய்யப்பட வேண்டுமென எம்ஜிஆர் சட்டம் கொண்டு வந்தார். அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இருக்கிறதா, இல்லையா என எனக்குத்தெரியாது.

தேர்தல் அரசியலில் ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுப்போம் எனக் கூறியிருந்தேன். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு 2023 இறுதியில் யாருடன் கூட்டணி என அறிவிப்போம். எடப்பாடி பழனிசாமிக்கு பதவி கொடுத்த பிறகு தான் அவருடைய சுயரூபம் தெரிந்தது. எப்படியாவது நிர்வாகிகளை வைத்து சூழ்ச்சி செய்து ஒற்றைத் தலைமை ஆகிவிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். திமுகவை தோற்கடிப்பதற்கு எந்த தியாகமும் செய்யத் தயார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: Live: டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு

Last Updated : Jun 30, 2022, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details