தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுக 4ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - கிள்ளியூர் வேட்பாளர் மாற்றம் - அமமுக சங்கரன்கோவில் வேட்பாளர்

அமமுக சார்பில் போட்டியிடும் ஆர்.கே. நகர் உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அமமுக 4ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அமமுக 4ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

By

Published : Mar 15, 2021, 10:02 PM IST

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நான்காவது கட்டப் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் ஆர்.கே. நகர் உள்ளிட்ட ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமமுக 4ஆவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதில், ஆர்.கே. நகர் தொகுதியில் டாக்டர் காளிதாஸ், அம்பாசமுத்திரம் தொகுதியில் ராணி ரஞ்சிதம், நாங்குநேரியில் பரமசிவ ஐயப்பன், அரக்கோணத்தில் மணிவண்ணன், ராணிப்பேட்டையில் வீரமணி, ஆற்காடு தொகுதியில் ஜனார்த்தனன், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் கார்த்திகேயன் போட்டியிடுகின்றனர்.

அடுத்ததாக அமமுகவின் சங்கரன்கோவில் (தனி) தொகுதியின் வேட்பாளராக இரா. அண்ணாத்துரை அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கிள்ளியூர் சட்டப்பேரவைத் தொகுதி அறிவிப்பு, கிள்ளியூர் தொகுதியின் வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மனோவா சாம் ஷாலான் மாற்றப்பட்டு புதிய வேட்பாளாராக ஏ. சீமா போட்டியிடுகிறார்.

கிள்ளியூர் வேட்பாளர் மாற்றம்

தொடக்கத்தில் தனித்து நின்ற அமமுக தற்போது தேமுதிக, ஏஐஎம்ஐஎம், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து மூன்றாவது அணியாக பலம் பெற்றுள்ளது. தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்த நிலையில் நேற்று தொகுதிப் பங்கீடு கையெழுத்தானது. உடனே தேமுதிக சார்பில் 60 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details